வைப்பாற்று படுகையில் மணல் அள்ள முயற்சி பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்

விளாத்திகுளம் அருகே வைப்பாற்று படுகையில் மணல் அள்ள முயற்சி பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்

Update: 2017-11-13 22:30 GMT

விளாத்திகுளம்,

விளாத்திகுளம் அருகே சித்தவநாயக்கன்பட்டி வைப்பாற்று படுகையில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் மீன் பண்ணை குட்டைகள் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து ஆற்று மணலை வெளியில் எடுத்து செல்ல வைப்பாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு ஒரு மாதத்துக்கு அனுமதி வழங்கி உள்ளார். இதையடுத்து வைப்பாற்றில் நீர்வழித்தடத்தை மறித்து, வாகனங்கள் செல்லும் வகையில், சரள் கற்களால் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் வைப்பாற்று படுகையில் முறைகேடாக மணல் கொள்ளை நடைபெறும் அபாயம் உள்ளது என்று கூறி, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த தனியார் நிலத்தில் ஆற்று மணலை அள்ளுவதற்காக பொக்லைன் எந்திரத்தை நேற்று கொண்டு வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தனியார் நிலத்தை முற்றுகையிட்டனர். பின்னர் மணல் அள்ளும் பணி நிறுத்தப்பட்டு, பொக்லைன் எந்திரம் திரும்பி எடுத்து செல்லப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்