புனேயில் பால் முகவரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.3¾ லட்சம் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
புனேயில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.3¾ லட்சம் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புனே,

பால் முகவர்
புனே, உராலி காஞ்சன் பகுதியை சேர்ந்தவர் பிரவீன்(வயது27). பால் முகவராக உள்ளார். சம்பவத்தன்று இவர், புனேயில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தனது உறவினரை பார்க்க காரில் வந்தார்.
பின்னர் அவருக்கு மருத்துவ செலவிற்கு தேவையான ரூ.3 லட்சத்து 90 ஆயிரத்தை அருகில் உள்ள வங்கியில் இருந்து எடுத்தார். பணத்தை காரில் வைத்துவிட்டு நண்பருடன் ‘டீ’ குடிக்க சென் றார். அவர் திரும்பி வந்து பார்த்தபோது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு, அதில் இருந்த ரூ.3 லட்சத்து 90 ஆயிரம் மாயமாகி இருந்தது.
போலீசார் விசாரணை
இதனால் பதறிப்போன அவர், சம்பவம் குறித்து அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், வங்கியில் இருந்தே பிரவீனை பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் கார் கண்ணாடியை உடைத்து பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.