34 இடங்களில் வைக்கப்பட்ட குப்பை தொட்டிகள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

கரூரில் 34 இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டன. இப்பணியை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

Update: 2017-11-12 22:45 GMT
கரூர்,

கரூரில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும், மக்காத குப்பைகளை தனித்தனியாக சேகரிக்க குப்பை தொட்டிகள் வைக்கும் நிகழ்ச்சி கரூர் சின்னஆண்டாங் கோவில் கிழக்கு பகுதியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குப்பை தொட்டிகள் வைக்கும் பணியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

ரூ.17 லட்சம் செலவில் வடிவேல் நகர், கோவை சாலை, வசந்தம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 34 இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்கப்படுகிறது. தொடர்ந்து படிப்படியாக அனைத்து இடங்களிலும் இந்த குப்பை தொட்டிகள் வைக்கப்படும். பொதுமக்கள் குப்பைகளை தெருக்களில் கொட்டாமல் குப்பை தொட்டிகளில் கொட்டி சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்ள உதவ வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதன்பின்னர் பென்னிகுயிக் நகர், அண்ணா நகரில் ஆய்வு மேற்கொண்ட அவர் அப்பகுதிகளில் சாக்கடை கழிவுநீர் தேங்காமல் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் கவிதா, உதவி கலெக்டர் சரவணமூர்த்தி உள்பட பலர் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்