விவசாயியை காரில் கடத்தி சரமாரி அரிவாள் வெட்டு மாமியார்-மருமகன் உள்பட 4 பேர் கைது
கீரனூர் அருே- தண்ணீர் பாய்ச்சும் தகராறில் விவசாயியை காரில் கடத்தி சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இது தொடர்பாக மாமியார்-மருமகன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கீரனூர்,
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே உள்ள உப்பிலியக்குடி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மனைவி மலர்க்கொடி (வயது 45). அதே பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (43), விவசாயி. மேலும் இவர்களுக்கு அப்பகுதியில் அடுத்தடுத்து வயல் உள்ளது. இதனால் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக இருதரப்பினருக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த தகராறு குறித்து மலர்க்கொடி அவரது மருமகன் புதுக்கோட்டையை சேர்ந்த சத்தியசீலனிடம் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த சத்தியசீலன், அவரது தம்பி நித்யானந்தம், திருவப்பூரை சேர்ந்த சுப்பிரமணி ஆகியோருடன் ஒரு காரில் கீரனூர் அருகே உப்பிலியக்குடிக்கு புறப்பட்டு சென்றனர்.
இந்நிலையில் அங்கு ஒரு ரைஸ்மில்லில் இருந்த நாக ராஜிடம், உங்களது மனைவிக்கு உடல்நலம் சரியில்லை. உடனே எங்களுடன் வாருங்கள் என்று கூறி, காரில் அழைத்து சென்றனர். குளத்தூர் சிவன் கோவில் அருகே சென்றதும், அங்கு காரை நிறுத்திய 3 பேரும், தாங்கள் வைத்திருந்த கட்டையால், நாகராஜை தாக்கியதோடு, உப்பிலியக்குடியில் உள்ள மலர்க்கொடியின் வீட்டிற்கு அழைத்து சென்றனர். பின்னர் மலர்க்கொடி முன்பு வைத்து நாகராஜை, சத்திய சீலன், உள்பட 3 பேரும் சேர்ந்து அரிவாளால் வெட்டினர். இதில் நாகராஜ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.
இதைக்கண்ட அப்பகுதி கிராமமக்கள் 4 பேரையும் மடக்கி பிடித்து கீரனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் படுகாயமடைந்த நாகராஜை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதைத்தொடர்ந்து மலர்க்கொடி அவரது மருகன் சத்தியசீலன் உள்பட 4 பேரையும் கைது செய்து கீரனூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் கடத்தலுக்கு பயன் படுத்தபட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கீரனூர் அருகே வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.