விவாகரத்தான பெண்ணை கற்பழித்ததாக மும்பை மாநகராட்சி அதிகாரி மீது வழக்குப்பதிவு

விவாகரத்தான பெண்ணை கற்பழித்ததாக மும்பை மாநகராட்சி அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2017-11-11 22:04 GMT

தானே,

விவாகரத்தான பெண்ணை கற்பழித்ததாக மும்பை மாநகராட்சி அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கற்பழிப்பு புகார்

மும்பை மாநகராட்சியில் ஜூனியர் சூப்பிரண்டு என்ஜினீயராக பணியாற்றி வருபவர் தத்தாராம் ஷிண்டே. இவர் மீது தானே காசர்வடவலி போலீசில் அதே பகுதியை சேர்ந்த விவாகரத்தான பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டு இருப்பதாவது:–

மாநகராட்சி அதிகாரி தத்தாராம் ஷிண்டே, என்னுடன் முதலில் நட்பாக பழகி வந்தார். சம்பவத்தன்று அவர் என் வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் எனக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து கற்பழித்தார்.

வழக்குப்பதிவு

மேலும் அவர் எண்ணை ஆபாசமாக படம் எடுத்து வைத்துள்ளார். இதேபோல திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறியும் பல முறை என்னுடன் உறவில் ஈடுபட்டார். தற்போது அவர் என்னை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

இந்த புகார் குறித்து போலீசார் மாநகராட்சி அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்