வாரிய தலைவர்களை நியமிப்பதில் தான் முதல்-அமைச்சருக்கு கவனம்; அன்பழகன் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு
மழை நிவாரண பணிகளில் கவனம் செலுத்தாமல் வாரிய தலைவர்களை நியமிப்பதில் தான் முதல்-அமைச்சர் கவனம் செலுத்துகிறார் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.
புதுச்சேரி,
புதுச்சேரி சட்டமன்ற அ.தி.மு.க. தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
புதுவையில் நடைபெற உள்ள குளிர்கால சட்டமன்ற கூட்டத்தொடரை குறைந்தது ஒரு வாரமாவது நடத்த வேண்டும். பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட புதிதாக 10 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை, கல்வீடு கட்டிக்கொள்ள ரூ.3 லட்சம் மானியம் உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த பல்வேறு அறிவிப்புகள் செயல்வடிவம் பெறவில்லை. இலவச அரிசிக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியும் செயல்படுத்தவில்லை. இதுபோன்ற பல்வேறு மக்கள் நலன் சார்ந்த விஷயங்களை விவாதிப்பதற்கு எடுத்துக்கொள்ள சட்டசபையை குறைந்தது 7 நாட்கள் நடத்த அரசுக்கு கவர்னர் அறிவுறுத்த வேண்டும்.
இது சம்பந்தமாக அ.தி.மு.க. சார்பில் சபாநாயகர், கவர்னருக்கு கடிதம் அனுப்பப்படும். தொடர் மழையால் மக்கள் பாதிக்கப்பட்டது குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டதோடு, தனது பணி நிறைவு பெற்றதாக அரசு கருதுகிறது. எந்த துறையும் மழை பாதிப்பிற்கு உரிய நிவாரணப் பணிகளை செய்யவில்லை. மழைக்காலம் தொடங்கும் முன்பே தூர்வாரும் பணியை மேற்கொண்டிருக்க வேண்டும்.
ஒரு பக்கம் கவர்னர் ஆய்வுக்கு செல்கின்றார். மற்றொரு பக்கம் முதல்-அமைச்சர் அதிகாரிகளுடன் ஆய்வுக்கு செல்கிறார். ஆனால் ஆக்கப்பூர்வமான செயல் எதுவும் இல்லை. மழை நிவாரண பணிகளில் கவனம் செலுத்தாமல் வாரிய தலைவர்களை நியமிப்பதில் தான் முதல்-அமைச்சர் கவனம் செலுத்தி வருகிறார்.
வாரிய தலைவர்கள் விவகாரத்தில் கவர்னர் சரியான முடிவு எடுத்துள்ளார். புதுச்சேரியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட வாரியங்களில் பிப்டிக், பவர் கார்ப்ரேஷன் உள்ளிட்ட சில வாரியங்களைத்தவிர மற்றவை ஆண்டுக்கு ரூ.150 கோடி நஷ்டம் ஏற்படுத்துகின்றன. பணத்தை முதலீடு செய்து பொருட்களை வாங்குவதில்தான் மிகப்பெரிய அளவில் ஊழல்கள் நடைபெறுகிறது. அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை எந்த வாரியமும் அவசியமற்ற ஒன்று.
வாரிய தலைவர்களுக்கும், துறை அமைச்சர்களுக்கும்கூட கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. அது கடந்த சட்டசபையிலும் எதிரொலித்தது. எனவே கவர்னர் புதுச்சேரியில் உள்ள அனைத்து வாரியங்களின் செயல்பாடுகளையும் சிறந்த அதிகாரிகளை கொண்டு குழு அமைத்து ஆய்வு செய்து மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும். வாரிய தலைவர்கள் விஷயத்தில் அ.தி.மு.க. கவர்னருக்கு துணை நிற்கும்.
நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் சபாநாயகர் வைத்திலிங்கம் எடுத்திருக்கும் முடிவு சரியானது. கவர்னரின் செல்லப்பிள்ளைகளாக இருக்கும் நியமன எம்.எல்.ஏ.க்கள் 23-ந் தேதி நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்போம் என்று கூறி இருக்கும் கருத்துக்கு பின்னால் கவர்னர் உள்ளார். அவர்களை கவர்னர் ஆதரிப்பது தவறு.
முதல்-அமைச்சர், கவர்னரின் தொடர் மோதல் போக்கால் மாநில வளர்ச்சி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. இனியாவது இருவரும் மோதல் போக்கை தவிர்த்து மாநில வளர்ச்சிக்காக செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.