மாவட்டத்தில் சூதாடிய 3 பேர் கைது புதுப்பட சி.டி., புகையிலை பொருட்கள் விற்றவர்களும் சிக்கினர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் புகையிலை பொருட்கள், புதுப்பட சி.டி.க்கள் விற்றவர்களும் சிக்கினர்.

Update: 2017-11-11 22:15 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணி மற்றும் போலீசார் சந்தூர் முருகன் கோவில் அருகில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த வெப்பாலம்பட்டியைச் சேர்ந்த ஆனந்தன் (வயது 33), சந்தூரைச் சேர்ந்த சக்திவேல் (20), ரகு (28) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.150 பறிமுதல் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி மற்றும் போலீசார் பெங்களூரு - கிருஷ்ணகிரி சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு சி.டி. விற்பனை கடையில் சோதனை செய்தனர். அப்போது அந்த கடையில் புதுப்பட சி.டி.க்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் புதுப்பட சி.டி.க்களை விற்றதாக கிருஷ்ணகிரி பாரதி நகரைச் சேர்ந்த முருகன் (32) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

புகையிலை பொருட்கள்

பேரிகை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவியரசி மற்றும் போலீசார் பேரிகையில் மாஸ்தி சாலையில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றதாக பேரிகை பாகலூர் சாலையைச் சேர்ந்த பானுபிரகாஷ் (31) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

மேலும் செய்திகள்