சட்டம் – ஒழுங்கு குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் ஆலோசனை

புதுவையில் சட்டம் – ஒழுங்கு குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் அஸ்வனி குமார் ஆலோசனை நடத்தினார்.

Update: 2017-11-10 22:15 GMT

புதுச்சேரி,

புதுவை மாநில தலைமை செயலாளராக அஸ்வனி குமார் கடந்த 8–ந் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் கவர்னர், முதல்–அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசினார். இந்த நிலையில் காவல்துறை தலைமை அலுவலகத்தில் நேற்று காலை சட்டம் – ஒழுங்கு குறித்த காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு தலைமை செயலாளர் அஸ்வனி குமார் தலைமை தாங்கினார். போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம், சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜீவ் ரஞ்சன், சந்திரன், அபூர்வா குப்தா, போலீஸ் சூப்பிரண்டுகள் பாலகிருஷ்ணன், கொண்டா வெங்கடேஸ்வரராவ், அப்துல் ரஹீம், குணசேகரன், ரச்சனாசிங் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் புதுவை மாநில சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்து தலைமை செயலாளர் அஸ்வனி குமார் கேட்டறிந்தார். மேலும் காவல்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகள், பட்ஜெட் நிதி செலவீனங்கள், கிடப்பில் உள்ள பணிகள், நிலுவையில் உள்ள கோப்புகள், போக்குவரத்து சீரமைப்பு, காவல்துறையின் மீதான பொதுமக்களின் புகார்கள் குறித்து கேட்டறிந்தார். காவல்துறை வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

மேலும் செய்திகள்