காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2017-11-10 22:00 GMT
சேலம்,

அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் ஏழாவது ஊதியக்குழுவில் கிராமிய அஞ்சல் ஊழியருக்கு அமைக்கப்பட்ட கமலேஷ் சந்திரா கமிட்டி அறிக்கையின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கோட்ட தலைவர் லோகநாதன் தலைமை தாங்கினார். கோட்ட பொருளாளர் ரமேஷ், கோட்ட செயலாளர் பாலமுருகன் உள்பட கிராமிய அஞ்சல் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர், அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்