இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் கஞ்சி காய்ச்சி குடிக்கும் போராட்டம்

சந்தேகவுண்டன்பா ளையத் தில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் கஞ்சி காய்ச்சி குடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-11-10 22:45 GMT

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே சந்தேகவுண்டன்பாளையம் அரிஜன காலனியில் சுமார் 40 வீடுகள் உள்ளன. இங்கு ஒரே வீட்டில் 3 குடும்பங்கள் வரை வசித்து வருவதால் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் கடந்த சில நாட்களாக சந்தேகவுண்டன்பாளையத்தில் உள்ள மந்தை புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு ஏற்படாததால் பொதுமக்கள் கஞ்சி காய்க்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்தி வரும் இடத்தில் காய்ச்சி குடித்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:–

சந்தேகவுண்டன்பாளையத் தில் கடந்த சில நாட்களாக இலவச வீட்டுமனை பட்டா கேட்டு புறம்போக்கு நிலத்தில் குடிசை போட்டு அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றோம். ஆனால் அதிகாரிகள் பட்டா வழங்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் போராட்டத்தின் ஒருபகுதியாக கஞ்சி குடித்து எதிர்ப்பை தெரிவித்தோம்.

வேறு பகுதியில் பட்டா தருவதாக கூறுகின்றனர். பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் வசித்து விட்டு, வேறு பகுதிக்கு சென்றால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே சந்தேகவுண்டன்பாளையம் பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். அதுவரைக்கும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்