எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவையொட்டி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மாரத்தான் போட்டி
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மாரத்தான் போட்டியை அமைச்சர் ராஜலட்சுமி நேற்று தொடங்கி வைத்தார்.
நெல்லை,
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மாரத்தான் போட்டியை அமைச்சர் ராஜலட்சுமி நேற்று தொடங்கி வைத்தார்.
மாரத்தான் போட்டிமறைந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மினி மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு அமைச்சர் ராஜலெட்சுமி தலைமை தாங்கி கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். நெல்லை மாவட்ட கலெக்டர் சந்நீப் நந்தூரி, கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த போட்டியில் சுரண்டை அரசு கலைக் கல்லூரி, பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரி, அம்பை கலைக்கல்லூரி, ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கலைக்கல்லூரி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், ராணி அண்ணா கலைக்கல்லூரி, சதக்கத்துல்லா அப்பா கல்லூரி, சாரா தக்கர் கல்லூரி, சேவியர் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் சுமார் 600–க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மாணவர்களுக்கு பரிசுபோட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் அண்ணா விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், கல்லூரிக்கல்வி இணை இயக்குனர் சரளா தேம்பாவனி, உதவி இயக்குனர் மயிலம்மாள், மாவட்ட விளையாட்டு அலுவலர் வீரபத்ரன், நெல்லை கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, நெல்லை மாநகர் மாவட்ட பொருளாளர் கணேசராஜா, அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.