போதிய வசதியின்றி நடத்தப்படும் மருத்துவ முகாம்கள் மாற்றுத்திறனாளிகள் குற்றச்சாட்டு
மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்கள் போதிய வசதியின்றி நடத்தப்படுவதாக மாற்றுத்திறனாளிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருப்புத்தூர்,
திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கலெக்டர் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒன்றியங்கள் வாரியாக மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். இதில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று அடையாள அட்டை, உபகரணங்கள், அரசு உதவிகள் உள்ளிட்டவற்றை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி ஒன்றியங்கள் வாரியாக மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் அவர்களுக்கு அடையாள அட்டை, மருத்துவ பரிசோதனை, உதவித்தொகை, கடனுதவி வழங்குதல், மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் இதர அரசு உதவிகள் வழங்கும் பணிகள் நடந்தன. இந்த முகாமிற்கு திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர். அவ்வாறு வந்த சில நபர்களை படம் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லை என கூறி அதிகாரிகள் அலையவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகள் அமர்வதற்கு போதிய இடவசதி இல்லாததால், தரையிலும், கழிப்பறை அருகிலும் கைக்குழந்தைகளுடன் அமர்ந்திருந்தனர். மேலும் மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்யும் இடத்திற்கு அழைத்துச்செல்ல அவர்களுக்கான இருக்கை கொண்ட வண்டி இல்லாததால் அவர்களை உடன் வந்தவர்கள் கைத்தாங்கலாக தூக்கிச்சென்றனர். இதனால் முகாமிற்கு வந்த மாற்றுத்திறனாளிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். எனவே இதுபோன்ற முகாம்களுக்கு போதிய வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.