பள்ளிபாளையத்தில் பயங்கர தீ விபத்து; 7 வீடுகள் சேதம்
பயங்கர தீ விபத்தில் 7 வீடுகள் எரிந்து சேதம் அடைந்தன. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம் ஆனது.
பள்ளிபாளையம்,
பள்ளிபாளையம் அரசு மருத்துவமனை அருகில் ஜனதா நகர் உள்ளது. இந்த பகுதியில் விசைத்தறி தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் அதிகளவில் வசித்து வருகிறார்கள்.
இந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று மாலை 4.30 மணியளவில் தீப்பிடித்து உள்ளது. அந்த தீ மற்ற வீடுகளுக்கும் பற்றி பிடித்து எரிந்தது.
இதை பார்த்ததும் அக்கம்பக்கத்தினர் ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் 7 வீடுகள் எரிந்து சேதம் அடைந்தன. அந்த வீடுகளில் இருந்த பீரோ, கட்டில், துணிகள், டி.வி. மற்றும் பொருட்கள் எரிந்து நாசம் ஆனது. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.
தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்ததால், மற்ற வீடுகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. தீப்பற்றி எரிந்தபோது வீடுகளில் யாரும் இல்லை. இதனால் உயிர்சேதம் இல்லை. ஆனால் ஒரு வீட்டில் நின்றிருந்த நாய், தீயில் கருகி செத்தது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் பள்ளிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீ விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தினார்கள். மின்கசிவு காரணமா? அல்லது வேறு காரணத்தால் தீ விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரித்தனர்.
வருவாய்த்துறை அலுவலர்கள் அங்கு வந்து, சேதம் அடைந்த வீடுகளை பார்வையிட்டனர்.
முன்னாள் நகராட்சி தலைவர் வெள்ளிங்கிரி, முன்னாள் துணைத்தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று வீடுகளை இழந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.