கிருஷ்ணாம்பதி குளத்தில் படகு சவாரி நடத்த திட்டம் மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
கோவை கிருஷ்ணாம்பதி குளத்தில் நடைபாதை, சிறிய பூங்கா உள்ளிட்டவை அமைப்பதுடன் படகுசவாரி மேற்கொள்ளவும் மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
கோவை,
கோவை மாநகர பகுதியில் வாலாங்குளம், சிங்காநல்லூர் குளம், குறிச்சி குளம், உக்கடம் பெரியகுளம், செல்வசிந்தாமணி குளம், கிருஷ்ணாம்பதி குளம், நரசாம்பதி குளம், முத்தண்ணன் குளம் ஆகிய 8 குளங்கள் உள்ளன. இதில் வாலாங்குளம், சிங்காநல்லூர் குளம் உள்ளிட்ட குளங்களில் ஆகாய தாமரைகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த குளங்கள் மாசடைந்து உள்ளன.
எனவே இந்த 8 குளங்களும் சீர்மிகு நகர (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு நடைபாதை, பூங்கா உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு பொழுதுபோக்கு மையங்களாக மாற்ற மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதன் முதற்கட்டமாக கிருஷ்ணாம்பதி குளத்தில் உள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள 8 குளங்களையும் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் மேம்படுத்த உள்ளோம். இதன் ஒருபகுதியாக கிருஷ்ணாம்பதி குளத்தில் ரூ.64 லட்சம் செலவில் ஆகாய தாமரைகளை அகற்றி, குளத்தின் கரைகளை காங்கிரீட் சுவர் மூலம் பலப்படுத்த உள்ளோம். இந்த பணிகள் அனைத்தையும் 3 மாத காலத்துக்குள் முடிக்க திட்டமிட்டு உள்ளோம்.
கிருஷ்ணாம்பதி குளம் உள்பட மாநகராட்சியின் கீழ் உள்ள 8 குளங்களிலும் பொதுமக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்ள வசதியாக நடைபாதை அமைத்தல், முதியோர்கள் அமருவதற்கு இருக்கைகள் அமைத்தல், சிறிய அளவிலான பூங்கா அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதுதவிர இந்த குளங்களில் படகு சவாரி, மிதக்கும் ஓட்டல் ஆகியவையும் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளோம். இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததும் மேற்கண்ட குளங்கள் கோவை மக்களின் சிறந்த பொழுதுபோக்கு மையங்களாக திகழும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.