தூத்துக்குடியில் இலவச சட்ட உதவி விழிப்புணர்வு நடைபயணம் நீதிபதி என்.ராஜசேகர் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடியில் இலவச சட்ட உதவி குறித்த விழிப்புணர்வு நடைபயணத்தை மாவட்ட முதன்மை நீதிபதி என்.ராஜசேகர் தொடங்கி வைத்தார்.

Update: 2017-11-09 21:00 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் இலவச சட்ட உதவி குறித்த விழிப்புணர்வு நடைபயணத்தை மாவட்ட முதன்மை நீதிபதி என்.ராஜசேகர் தொடங்கி வைத்தார்.

நடைபயணம்

ஏழை, எளிய மக்களுக்கும் நீதி பெறுவதில் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் 9–11–95 அன்று சட்டப்பணிகள் ஆணைக்குழு நடைமுறைக்கு வந்தது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 9–ந் தேதி தேசிய சட்டப்பணிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நேற்று விழிப்புணர்வு நடைபயணம் நடந்தது. இந்த நடைபயணத்தை தூத்துக்குடி கோர்ட்டு முன்பு மாவட்ட முதன்மை நீதிபதி என்.ராஜசேகர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு

இந்த நடைபயணம், பாளையங்கோட்டை ரோடு, குரூஸ்பர்னாந்து சிலை, பாலவிநாயகர் கோவில் தெரு வழியாக மீண்டும் கோர்ட்டு வளாகத்தை வந்தடைந்தது. இதில், மாணவ–மாணவிகள் இலவச சட்ட உதவி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ், போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன், உதவி போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான சாமுவேல் பெஞ்சமின், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்