செங்கத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் கலெக்டர் ஆய்வு
செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நேற்று டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தார்.
செங்கம்,
செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நேற்று டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தார். செங்கம் பகுதியில் உள்ள தோக்கவாடி, கொல்லகொட்டாய், மில்லத்நகர் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது வீட்டு தொட்டிகளில் உள்ள நீரில் டெங்கு கொசு புழுக்கள் உள்ளதா? என்றும், தெருக்களில் குப்பை கழிவுகள், கால்வாய்களில் கழிவுநீர் தேங்கியுள்ளதா? என்றும் கலெக்டர் பார்வையிட்டார். மேலும் தெருக்களில் நீர்தேக்க தொட்டிகள் சுத்தமாக உள்ளதா? என ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது செங்கம் தாசில்தார் உதயகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரேணுகா, பேரூராட்சி செயல் அலுவலர் கோபால் ஆகியோர் உடனிருந்தனர்.