அரசு பள்ளியில் ஆபத்தான நிலையில் உள்ள மின் வயர்கள்
கண்ணமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மின் இணைப்பு பெட்டியில் மின்வயர்கள் ஆபத்தான நிலையில் உள்ளது.
கண்ணமங்கலம்,
கண்ணமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடத்தின் மாடிக்கு செல்லும் வழியில் உள்ள மின் இணைப்பு பெட்டியில் மின்வயர்கள் ஆபத்தான நிலையில் உள்ளது.
இங்கு படிக்கும் மாணவிகள் கவனக்குறைவாக மின்வயர்கள் உள்ள இடங்களுக்கு சென்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே ஆபத்தான நிலையில் உள்ள மின்வயர்களை உடனடியாக சரி செய்ய வேன்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.