திருப்பத்தூரில் பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

Update: 2017-11-09 22:30 GMT

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் சப்–கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடந்தது. சப்–கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:–

வெங்கடேசன் :– பாலாறு பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றியதற்கு நன்றி. அப்பகுதியில் உள்ள ஏரிகள் நிரம்பியுள்ளதால் விவசாயிகள் பயனடைந்து உள்ளார்கள். மேலும் வாணியம்பாடி நகராட்சி மூலம் வளையாம்பட்டில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மலைபோல் குவித்துள்ள குப்பைகளை அகற்ற வேண்டும். அங்கு தண்ணீர் தேங்கியிருப்பதால் டெங்கு கொசு உருவாகி உள்ளது.

சப்–கலெக்டர்:– வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பார்கள். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற அனைத்து துறை சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயி:– திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

சப்–கலெக்டர்:– ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

மேலும் செய்திகள்