விருது பெற வீரதீர பெண்குழந்தை பற்றி 20-ந்தேதிக்குள் பரிந்துரைக்க வேண்டும் சென்னை கலெக்டர் அறிக்கை

சென்னை மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2017-11-08 22:16 GMT
சென்னை,

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24-இல் சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக பங்காற்றும் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு மாநில அரசின் விருது வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி சென்னை மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த பெண் குழந்தைகளுக்கு விருது வழங்கும் பொருட்டு மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையுடன் உரிய விண்ணப்பத்தினை அளிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையொட்டி பெண்களின் முன்னேற்றத்திற்காக சமூகநலன் சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொண்டு பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் மேன்மையாக பணிபுரிந்த பெண் குழந்தைக்கு விருது வழங்க இருப்பதால் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாநிலத்தில் ஒவ்வொரு வருடமும் மேற்காண் அம்சங்களில் சிறந்து விளங்கும் ஒரு பெண் குழந்தை தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு பாராட்டு பத்திரம் மற்றும் ரூபாய் ஒரு இலட்சத்திற்கான காசோலை வழங்கப்படும்.

இந்த விருதுக்கு நவம்பர் 20-ந் தேதிக்குள் உரிய பரிந்துரைகளை வழங்க வேண்டும். உரிய விண்ணப்பங்களை மாவட்ட சமூகநல அலுவலர் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், 8-வது தளம், சிங்காரவேலர் மாளிகை, ராஜாஜி சாலை, சென்னை-1 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் அல்லது தொடர்பு கொள்ள வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் அன்புச்செல்வன் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்