மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது
மத்திய அரசை கண்டித்து நாகையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்,
நாகை தலைமை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர்கள் ராமலிங்கம், ராஜேந்திரநாட்டார், கலையரசன், நகர தலைவர் ரவிச்சந்திரன், வேதாரண்யம் முன்னாள் நகரசபை தலைவர் சிவபிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட விவசாய அணி செயலாளர் ராமலிங்கம், கீழையூர் வட்டார தலைவர் சுப்பிரமணியன், நகர துணை தலைவர் மருதவாணன், நாகூர் நகர தலைவர் சுல்தான் அப்துல்காதர், மாநில சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் நவுசாத்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
1,000, 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்து மக்களுக்கு சிரமம் ஏற்படுத்திய மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் அங்கிருந்து அவர்கள் ஊர்வலமாக சென்று பெரிய கடைத்தெருவில் மத்திய அரசை கண்டித்து பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.