100 நாள் வேலை உறுதி திட்டத்தில் ஊதியம் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
100 நாள் வேலை உறுதி திட்டத்தில் ஊதியம் வழங்காததை கண்டித்து, அணைக்குடத்தில் கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
தா.பழூர்,
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் அணைக்குடம் ஊராட்சியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந் நிலையில் அக்கிராமத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் ஏரி, வாய்க்கால் தூர்வாருதல் போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு சுமார் 6 மாத காலமாக ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. அதேபோன்று அந்த ஊராட்சியில் தமிழக அரசால் விலையில்லா ஆடு, மாடு வழங்கும் திட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பயனாளிகள் தேர்வு செய்து, அவர் களுக்கு ஆடு, மாடுகள் வழங்கப்பட்டுவிட்டன.
ஆனால் அரசு அறிவித்த ஆணைப்படி தகுதி வாய்ந்த ஏழை, எளிய மக்களை அதி காரிகள் தேர்வு செய்யாமல் ஒருதலை பட்சமாக தேர்வு செய்துள்ளதாக பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது. இக்கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் தரப்பில் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பலமுறை கூறியும், அவர் களுக்கு ஊதியம் வழங்கவும், தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு ஆடு, மாடு வழங்க எந்த ஒரு நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அணைக்குடம் அய்யனார் கோவில் பஸ் நிறுத்தம் ஜெயங்கொண்டம்-தா.பழூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த தா.பழூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறு கூறினர். இதற்கு மறுப்பு தெரிவித்த கிராம மக்கள், இதுதொடர் புடைய தா.பழூர் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் வந்து உறுதி அளித்தால் தான் நாங்கள் இங்கிருந்து கலைந்து செல்வோம் என போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதை யடுத்து அங்கு விரைந்து வந்த தா.பழூர் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பத் உள்பட அதிகாரிகள் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அதிகாரிகள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி யளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் ஜெயங்கொண்டம்- தா.பழூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.