நகைக்கடை அதிபர் உள்பட பலரிடம் ரூ.23¾ லட்சம், நகை மோசடி செய்த நர்சு
நகைக்கடை அதிபர் உள்பட பலரிடம் ரூ.23¾ லட்சம், நகை மோசடி செய்த நர்சு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மெயின் ரோட்டில் நகைக்கடை நடத்தி வருபவர் சர்புதீன். இவரிடம் தென்காசி அருகே உள்ள கொடிக்குறிச்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முருகன் மனைவி களஞ்சியம் என்பவர் மொத்தமாக நகைகள் வாங்கி, தனக்கு தெரிந்தவர்களுக்கு விற்பனை செய்து வந்தார். மேலும் களஞ்சியம் மலையடிகுறிச்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாகவும் வேலை பார்த்து வந்தார்.
தொடர்ந்து சர்புதீனிடம் நகைகள் வாங்கி விற்று வந்த களஞ்சியம் ரூ.5 லட்சம் கடன் பாக்கி வைத்து இருந்தார். இதுகுறித்து சர்புதீன் கேட்ட போது, தன்னிடம் பணம் இல்லை என்று களஞ்சியம் தெரிவித்தார். மேலும் சிவகிரி அருகே உள்ள தேவிபட்டினத்தை சேர்ந்த தன்னுடைய தோழி கலா என்பவர் தனக்கு தர வேண்டிய ரூ.5 லட்சத்திற்காக காசோலையை தந்து இருக்கிறார். அதை வேண்டுமானால் நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள் என்று களஞ்சியம், சர்புதீனிடம் கூறினார்.
போலீஸ் விசாரணை
இதை வாங்கிக் கொண்ட அவர் அங்குள்ள வங்கி ஒன்றில் காசோலையை மாற்றச் சென்றார். அந்த காசோலை மீது வங்கி ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்படவே காசோலையில் உள்ள கையெழுத்து கலா உடையது தானா? என்று நிரூபிக்கும் படி சர்புதீனிடம் அந்த காசோலையை திருப்பி கொடுத்தனர்.
இதையடுத்து கலா வீட்டிற்கு சென்று சர்புதீன் விசாரித்த போது, அது தன்னுடைய கையெழுத்து இல்லை என்றும், நான் யாருக்கும் காசோலை கொடுக்கவில்லை என்றும் கலா தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சர்புதீன் இதுகுறித்து கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பல்வேறு இடங்களில் மோசடி
மேலும் களஞ்சியம் ஏராளமான பெண்களிடம் வீட்டுப்பத்திரம், பணம் பெற்று கொண்டு மோசடியில் ஈடுபட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மலையடிகுறிச்சியைச் சேர்ந்த கோமதி என்ற பெண்ணிடம் வீட்டு பத்திரத்தை வாங்கி, ஒரு வங்கியில் ரூ.7 லட்சமும், வள்ளியிடம் ரூ.1 லட்சமும், வசந்தாவிடம் ரூ.4 லட்சமும், இடைகாலை சேர்ந்த பீமா என்பவரிடம் ரூ.1½ லட்சமும், சங்கீதாவிடம் ரூ.1 லட்சமும், அமுதாவிடம் ரூ.30 ஆயிரமும், சிந்தாமணிபுதூரைச் சேர்ந்த தங்கத்தாயிடம் ரூ.3¼ லட்சமும், தாருகாபுரத்தை சேர்ந்த லட்சுமியிடம் ரூ.80 ஆயிரமும், கொடிக்குறிச்சியைச் சேர்ந்த பழனித்தாயிடம் 3¾ பவுன் தங்க சங்கிலியையும் களஞ்சியம் ஆசைவார்த்தை கூறி மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில், கடையநல்லூர், இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, களஞ்சியத்தை தேடிவருகிறார்கள்.