தாய் சேய் நல விடுதியை திறக்க கோரி ஆர்ப்பாட்டம்

திருமங்கலம் நகரில் உள்ள காந்தி சிலை அருகே தாய் சேய் நலவிடுதி 3 படுக்கைளுடன் இயங்கி வந்தது.

Update: 2017-11-08 22:00 GMT

திருமங்கலம்,

திருமங்கலம் நகரில் உள்ள 27–வது வார்டில் காந்தி சிலை அருகே தாய் சேய் நலவிடுதி (ஆஸ்பத்திரி) 3 படுக்கைளுடன் இயங்கி வந்தது. இங்கு தென்பகுதி வார்டுகளை சேர்ந்தவர்கள் மற்றும் அருகில் உள்ள கிராமத்தினரும் பயன் பெற்று வந்தனர். பொதுமக்களின் கோரிக்கை தொடர்ந்து அரசு 10 ஆண்டுகளுக்கு முன்பு சொக்கநாதர் மீனாட்சியம்மன் கோவில் அருகே பெரிய அளவிலான ஆஸ்பத்திரி கட்டப்பட்டது.

இதையடுத்து காந்தி சிலை அருகே உள்ள ஆஸ்பத்திரி வாரத்தில் 3 நாட்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த சில வருடங்களாக டாக்டர்கள், நர்சுகள் யாரும் வராததால், இந்த ஆஸ்பத்திரியை பயன்படுத்தி வந்த சுற்றுவட்டார கிராமத்தினர் பாதிப்படைந்தனர். இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பெண்கள், நடிகர் விஜய் மன்றத்தினர் ஆகியோர் ஆஸ்பத்திரியை திறக்க வேண்டும் என்று நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 தகவலறிந்து வந்த நகராட்சி சுகதாரப்பிரிவு அதிகாரிகள் விரைவில் ஆஸ்பத்திரி இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து, ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்