வாலிபர் செல்போனை பறித்ததால் ரெயிலில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்

வாலிபர் செல்போனை பறித்ததால் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

Update: 2017-11-07 22:15 GMT

மும்பை,

வாலிபர் செல்போனை பறித்ததால் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

கீழே விழுந்தார்

மும்பை பாண்டுப்பை சேர்ந்த இளம்பெண் அங்கிதா (வயது19). இவரது தந்தை உடல்நிலை சரியில்லாமல் தாதரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று முன்தினம் மதியம் தந்தையை பார்க்க பாண்டுப்பில் இருந்து ரெயிலில் தாதர் வந்தார். ரெயில் காஞ்சூர்மார்க் ரெயில்நிலையத்தில் இருந்து புறப்பட்டபோது அங்கிதா, வாசலில் நின்றபடி செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது பிளாட்பாரத்தில் நின்ற வாலிபர் ஒருவர் திடீரென அங்கிதாவின் செல்போனை பறித்தார்.

இதனால் நிலைதடுமாறி அவர் ஓடும் ரெயிலில் இருந்து கீழே விழுந்தார். எனினும் அவர் ரெயில் சக்கரத்தில் சிக்காமல், பிளாட்பாரத்தில் விழுந்ததால் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

வாலிபர் கைது

இந்தநிலையில் பிளாட்பாரத்தில் நின்று கொண்டு இருந்த மற்ற பயணிகள் அங்கிதாவிடம் செல்போனை பறித்த வாலிபரை மடக்கி பிடித்தனர். தகவல் அறிந்து வந்த ரெயில்வே போலீசார் காயமடைந்த அங்கிதாவை மீட்டு முதல் உதவி சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவரிடம் செல்போன் பறித்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். விசாரணையில், கைதான வாலிபர் விக்ரோலி பகுதியை சேர்ந்த பதான்(19) என்பது தெரியவந்தது.

மேலும் செய்திகள்