திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழாவின்போது பக்தர்கள் மலையேற தடை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழாவின்போது பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் கந்தசாமி கூறினார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அடுத்த மாதம் (டிசம்பர்) 2-ந் தேதி கார்த்திகை தீபத்தையொட்டி மலை மீது தீபம் ஏற்றப்படுகிறது. இந்த விழா வருகிற 23-ந் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு கோவிலில் பல்வேறு முன்னெச்சரிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கார்த்திகை தீபத் திருவிழாவின்போது திருவண்ணாமலையில் தற்காலிகமாக 14 இடங்களில் அமைக்கப்பட உள்ள பஸ் நிலையங்கள் குறித்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி ஆய்வு செய்தார். மேலும் தற்காலிக பஸ் நிலையங்களில் அமைக்கப்பட உள்ள குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் கலெக்டர் கேட்டறிந்தார்.
இதையடுத்து மாலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள உள்துறை அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுக்கு இடையேயான ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. கோவில் இணைஆணையர் ஜெகன்நாதன், திருவண்ணாமலை உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி, நகராட்சி ஆணையாளர் பாரிஜாதம், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரங்கராஜன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக கலெக்டர் கந்தசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அருணாசலேஸ்வரர் கோவிலில் வருகிற 2-ந் தேதி கார்த்திகை தீபத் திருவிழா நடக்கிறது. இதனையொட்டி ரூ.7½ கோடி மதிப்பில் பணிகள் நடந்து வருகிறது. அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆலோசிக்கப்பட்டு ஒவ்வொரு துறைக்கு ஒரு பணி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 14 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.
கிரிவலம் செல்லும் பெண்கள், முதியோர்கள், குழந்தைகளுக்காக தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து கிரிவலம் செல்லும் பாதைக்கு செல்வதற்கு இலவச சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
அன்னதானம் வழங்குவதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் 7 அல்லது 8 இடங்கள் தேர்வு செய்யப்படும். அன்னதானம் செய்ய விரும்புவோர் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு பணம் செலுத்தினால் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் குறிப்பிட்ட இடத்தில் வைத்து அன்னதானம் செய்யலாம். அதன் மூலம் பக்தர்கள் நடந்து செல்லும் பாதை சுத்தமாக வைத்து கொள்ள முடியும்.
தீபத்திருவிழாவின் போது மலையேற தடை விதிக்கப்பட்டு உள்ளது. மலையில் மருத்துவ வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் இல்லை. எனவே, திருவிழாவின் போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மலையேற பக்தர்களுக்கு தடை செய்யப்பட்டு உள்ளது. மேலும் மலைப்பாதைகளும் மூடப்பட உள்ளன.
திருவிழாவில் 9 ஆயிரத்து 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் வனத்துறை சார்பில் 250-க்கும் மேற்பட்டோர் ஈடுபட உள்ளனர்.
பக்தர்களின் வசதிக்காக தீபத்திருவிழாவை முன்னிட்டு 3 நாட்கள் 10 சிறப்பு ரெயில்கள் இயக்க மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
தீபத்திருவிழாவை முன்னிட்டு பஸ் நிறுத்தம், மருத்துவ முகாம், அன்னதானம் நடைபெறும் இடம் போன்றவை அறிந்து கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் செல்போன் செயலி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இதன் மூலம் பக்தர்கள் பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.