தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு: ஏரிகளை அமைச்சர் கந்தசாமி பார்வையிட்டார்
தொடர்மழை பெய்ததையொட்டி ஏம்பலம் தொகுதியில் உள்ள கோர்க்காடு, புதுக்குப்பம் உள்ளிட்ட ஏரிகளை அமைச்சர் கந்தசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நெட்டப்பாக்கம்,
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. ஏம்பலம் தொகுதியில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி பலர் பாதிக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட இடங்களை நேற்று காலை அதிகாரிகளுடன் சென்று அமைச்சர் கந்தசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். கரிக்கலாம்பாக்கம், ஏம்பலம், நத்தமேடு, புதுக்குப்பம் மற்றும் கோர்க்காடு ஆகிய பகுதிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அந்த பகுதிகளில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் மற்றும் கரிக்கலாம்பாக்கம் ஏரி, புதுக்குப்பம் ஏரி மற்றும் கோர்க்காடு ஏரிகளை பார்வையிட்டார்.
தற்போது பெய்த மழையால் அந்த ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதை அமைச்சர் கந்தசாமியிடம் அதிகாரிகள் விளக்கி கூறினார்கள்.
புதுச்சேரி மாநிலத்தில் கொள்ளளவில் 3-வது பெரிய ஏரியான கோர்க்காடு ஏரியை அமைச்சர் ஆய்வு செய்தபோது அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அமைச்சரை சந்தித்து சில கோரிக்கைகளை தெரிவித்தனர். கோர்க்காடு ஏரியில் உள்ள சிறு பட்டா நிலப்பகுதியை அரசு நில ஆர்ஜிதம் செய்ய வேண்டும் என்றும், அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று முறையிட்டனர்.
அதைத்தொடர்ந்து ஏரிக்கரையிலேயே வில்லியனூர் துணை ஆட்சியர் உதயகுமார், தாசில்தார் கார்த்திகேயன், நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மனோகர் ஆகியோருடன் அமைச்சர் கந்தசாமி ஆலோசனை நடத்தினார்.
அந்த பகுதி மக்களிடம் கோர்க்காடு ஏரியை சுற்றுலாதலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கலாமா என்பது குறித்து கருத்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது முன்னாள் எம்.எல்.ஏ. நீலகங்காதரன் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் அமைச்சருடன் சென்றனர்.