பெரம்பலூரில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தனியார் பள்ளியில் கலெக்டர் ஆய்வு
பெரம்பலூரில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தனியார் பள்ளியில் கலெக்டர் சாந்தா ஆய்வு செய்தார்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட ஒரு தனியார் பள்ளிக்கு நேரில் சென்று, டெங்கு கொசுப் புழுக்கள் உருவாகாமல் தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு கிறதா? என்று மாவட்ட கலெக்டர் சாந்தா ஆய்வு மேற்கொண்டார். மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டிகள் மற்றும் வகுப்பறைகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு ஏதேனும் டெங்கு கொசுப் புழுக்கள் உருவாக வாய்ப்புள்ளதா என்று ஆய்வு செய்து, கொசுப்புழு உற்பத்தியாக வாய்ப்பு அளிக்காமல் பள்ளியின் அனைத்து பகுதிகளையும் சுத்தம் செய்து கொசு உற்பத்தியாகாத வகையில் பள்ளி வளாகங்களை பராமரிக்க வேண்டும் என்றும், மாணவ-மாணவிகளுக்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் உடனடியாக அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இதையடுத்து காய்ச்சல் உள்ளவர்களை அருகில் உள்ள அரசு மருத்துவர்களிடம் அழைத்துச்சென்று உரிய சிகிச்சை எடுக்க அறிவுறுத்த வேண்டும் என்றும் பள்ளியின் தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர், வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், நகராட்சி ஆணையர் முரளி, வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.