திருப்புவனம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருப்புவனம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவமனை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்புவனம்,
திருப்புவனம் அருகே பூவந்தியில் உள்ள வட்டார மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கும், அவர்களுடன் இருப்பவர்களுக்கும் உரிய அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும், காய்ச்சலுடன் வருவோருக்கு காலதாமதம் இன்றி ரத்த பரிசோதனை செய்து உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும், டெங்கு காய்ச்சலால் இறந்துபோன பூவந்தி சிறுவன் அமுதன் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவமனை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் அய்யம்பாண்டி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தண்டியப்பன், வீரபாண்டி, மாவட்டக்குழு உறுப்பினர் ஜெயராமன், சக்திவேல், அம்பலம், மகாலிங்கம், ராமு உள்பட பலர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்ட உரையாற்றினர்.