மும்பை வந்த ரெயிலில் பெண் பயணியை மானபங்கம் செய்த துப்புரவு பணியாளர் பிடிபட்டார்

குஜராத்தில் இருந்து மும்பை வந்த ரெயிலில் பெண் பயணியை மானபங்கம் செய்த துப்புரவு பணியாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2017-11-06 22:31 GMT
மும்பை,

மும்பையை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். குஜராத் சென்றிருந்த இவர், சம்பவத்தன்று அங்கிருந்து குட்ச் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மும்பை திரும்பி கொண்டிருந்தார். அவர் ஏ.சி. பெட்டியில் பயணம் செய்தார். நள்ளிரவு 1.30 மணியளவில் அவர் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த போது, அந்த ரெயிலில் பணியில் இருந்த துப்புரவு பணியாளர் பானுபிரதாப் சிங்(வயது23) என்பவர் பெட்டிக்குள் வந்து மேற்படி பெண் பயணியின் உடலில் தொடக்கூடாத இடங்களில் தொட்டு மானபங்கம் செய்து உள்ளார்.

துப்புரவு பணியாளர் கைது

இதனால் திடுக்கிட்டு விழித்த அந்த பெண் தான் மானபங்கம் செய்யப்படுவதை கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு விழித்த மற்ற பயணிகள் உடனடியாக பானுபிரதாப் சிங்கை பிடித்து கொண்டனர். அப்போது அவர், தான் ரெயில் பெட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்ததாக கூறி மழுப்பினார்.

ரெயில் விராம்காவ் ரெயில் நிலையம் வந்ததும் அவர் ரெயில்வே போலீசில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் செய்திகள்