ரூ.1,000 கோடி கோவில் சொத்துக்களை மீட்கக்கோரி கோட்டை மாரியம்மனிடம் சிவனடியார்கள் கூட்டமைப்பினர் மனு
இந்து சமய அறநிலையத்துறை கோவிலுக்கு சொந்தமான ரூ.1,000 கோடி சொத்துக்களை மீட்கக்கோரி சேலம் கோட்டை மாரியம்மனிடம் சிவனடியார்கள் கூட்டமைப்பினர் நேற்று மனு அளித்தனர். அப்போது, அவர்கள் அதிகாரிகளை கண்டித்து கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
அனைத்து சிவனடியார்கள் கூட்டமைப்பு செயலாளர் சரவணக்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று சேலம் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர், அவர்கள் இந்து சமய அறநிலையத்துறை கோவில்களுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்காத உதவி ஆணையரை கண்டித்து திடீரென கோஷமிட்டனர். அப்போது, திருடாதே..! திருடாதே..! கோவில் சொத்துக்களை திருடாதே..! மீட்போம்..! மீட்போம்..! கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்போம் எனவும், அதிகாரிகளை கண்டித்தும் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து சிவனடியார்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கோட்டை மாரியம்மனிடம் மனு அளித்து நடவடிக்கை எடுக்கக்கோரி வேண்டிக்கொண்டனர்.
இதுகுறித்து அனைத்து சிவனடியார்கள் கூட்டமைப்பு செயலாளர் சரவணக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
சேலம் மாவட்டத்தில் சுமார் ரூ.1,000 கோடி மதிப்பிலான பல்வேறு கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டும், அபகரிப்பு செய்யப்பட்டும் உள்ளன. இதை மீட்கக்கோரி அறநிலையத்துறையிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு மாறாக அதிகாரிகள், ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணையாக செயல்பட்டு வருகிறார்கள்.
குறிப்பாக அயோத்தியாபட்டணம் ராமர் கோவில், சிக்கம்பட்டி மாரியம்மன் கோவில், சேலம் நரசோதிப்பட்டி சென்றாய பெருமாள் கோவில், உலிபுரம் கம்ப பெருமாள் கோவில், பூலாம்பட்டி மதுர காளியம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில் சொத்துக்கள் இன்னும் மீட்கப்படாமல் உள்ளது. அங்குள்ள அசையும் சொத்து, அசையாத சொத்துக்கள் களவாடப்படுவது பற்றி எடுத்துக்கூறியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுகிறார்கள்.
உண்டியல் திறப்பிலும் ஊழல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இவற்றையெல்லாம் கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர். இதனால் தான் இறுதிக்கட்டமாக கோட்டை மாரியம்மனிடம் எங்களது மனுவை அளித்து நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுதலை வைத்துள்ளோம். இதற்கு பின்பும் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு சொத்துக்களை அதிகாரிகள் மீட்க நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் விரைவில் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் சொத்துக்களை மீட்பது தொடர்பாக அறிக்கை தயாரித்து இணை ஆணையரிடம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் மீட்கப்பட்டு வருகின்றன. ஆக்கிரமிப்பு பற்றி யாரேனும் புகார் தெரிவித்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.