பட்டப்பகலில் வீடு புகுந்து ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியை கொலை செய்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை
திருச்சியில் பட்டப்பகலில் வீடு புகுந்து ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியை கொலை செய்த 3 பேருக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
திருச்சி,
திருச்சி அரியமங்கலம் அம்பிகாபுரத்தை சேர்ந்தவர் ரத்தினம் (வயது69). ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. இவரது மனைவி வாசுகி. இந்த தம்பதியினர் தங்களது வீட்டின் மாடி பகுதியை வாடகைக்கு விட முடிவு செய்து இருந்தனர். இந்நிலையில் கடந்த 24-11-2014 அன்று பகல் 1 மணி அளவில் அரியமங்கலம் காமராஜ் நகரை சேர்ந்த பொன்னுசாமி மகன் சதீஷ்குமார் (31), கரூர் காந்திகிராமத்தை சேர்ந்த சேகர் மகன் சதீஷ்குமார் (28), திருச்சி கோட்டை பகுதி சுந்தரபாண்டியன் தெருவை சேர்ந்த கணேசன் மகன் சங்கர் (32) ஆகிய 3 பேரும் ரத்தினம் வீட்டிற்கு ஒரு காரில் வந்தனர்.
குத்திக்கொலை
கொள்ளையடிக்கும் நோக்கத்தில் வந்த அவர்கள் நாங்கள் வாடகைக்கு குடியிருக்க வீடு தேடி வருகிறோம். உங்கள் வீட்டின் மாடியை காட்டுங்கள் என கூறினார்கள். இதனை உண்மை என நம்பிய ரத்தினம் அவர்களை வீட்டின் மாடிக்கு அழைத்து சென்றார். அப்போது அவர்கள் 3 பேரும் சேர்ந்து ரத்தினத்தை கத்தியால் குத்தினார்கள். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் அலறிய படி விழுந்து இறந்தார். பின்னர் கீழே இறங்கி வந்த 3 பேரும் வாசுகியிடம் நகை பறிக்க முயன்றனர். அப்போது அவர் திருடன் திருடன் என சத்தம் போட்டார்.
தப்பி ஓட்டம்
இதனை கேட்ட பக்கத்து வீட்டினர் மற்றும் ஊர் பொது மக்கள் திரண்டு ஓடி வந்தனர். அதற்குள் அந்த 3 பேரும் தாங்கள் வந்திருந்த காரை அங்கேயே விட்டு விட்டு உயிர் பிழைத்தால் போதும் என ஓட்டம் பிடித்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. அரியமங்கலம் போலீசார் சதீஷ்குமார் உள்பட 3 பேரையும் கைது செய்து திருச்சி மூன்றாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
ஆயுள் தண்டனை
இந்த வழக்கை நீதிபதி என். லோகேஸ்வரன் விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கும் ஆயுள் சிறைத்தண்டனையும், தலா ரூ. 10 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஒரு வருடம் சிறைத்தண்டனையும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் போலீசார் தரப்பில் அரசு கூடுதல் வழக்கறிஞர் தெட்சிணா மூர்த்தி ஆஜராகி வாதாடினார்.