வாய்க்கால்களில் உடைப்பு: 31 ஆயிரத்து 500 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின விவசாயிகள் வேதனை
சீர்காழி பகுதியில் உள்ள வாய்க்கால்களில் உடைப்பு ஏற்பட்டதால் 31 ஆயிரத்து 500 ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
சீர்காழி,
நாகை மாவட்டம், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், கொள்ளிடம் ஆகிய பகுதிகளில் கடந்த 8 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதுவரை சீர்காழி பகுதியில் 70 செ.மீ மழை கொட்டித்தீர்த்தது. இந்த மழையால் வைத்தீஸ்வரன்கோவிலில் திருநகரி வாய்க்கால் மற்றும் கோவிலான் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்தது.
தொடர்ந்து விடாமல் பலத்த மழை பெய்து வருவதால் நேற்று பொறை வாய்க்கால், பழவாறு வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்களிலும் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அத்தியூர், பட்டவிளாகம், பனிக்கிருப்பு, ஓலையாம்புத்தூர், செம்பியான்வேளாங்குடி, கார்குடி, சொக்கங்குளம், அகணி, நிம்மேலி, விளந்திடசமுத்திரம், எருக்கூர், குன்னம், மாதிர வேளூர், சென்னியநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வயல்களில் மழைநீர் புகுந்து கடல்போல் காட்சி அளிக் கிறது. இதனால் 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளன. மேலும், வாய்க்கால்கள் உடைப்பால் பனிக்கிருப்பு கிராமத்திற்கு செல்லும் சாலை மற்றும் குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்துள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் சாலையில் தேங்கிய இடுப்பளவு மழைநீரை கடந்து செல்லவேண்டிய நிலை இருந்து வருகிறது.
இதைப்போல பட்ட விளாகம் கிராமத்தில் இருந்து கீழஅத்தியூருக்கு செல்லும் தற்காலிக நடைபாலம் மழை நீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் சீர்காழி அருகே மணலகரம் கிராமத்தில் உள்ள இரட்டைவாய்க் காலில் ஏற்பட்ட உடைப்பால் மணலகரம், அரசூர், பச்சைபெருமாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. இதேபோல் விநாயகக்குடி கிராமத்தில் பொறைவாய்க் காலில் ஏற்பட்ட உடைப்பால் விநாயகக்குடி, வடகால், கடவாசல் உள்ளிட்ட பகுதிகளில் 1000 ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தொடர் மழையால் திருமுல்லைவாசல், கூழையாறு, தொடுவாய் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுனாமி குடியிருப்புகளில் மழைநீர் தேங்கி உள்ளது. மேலும் பூம்புகார், வானகிரி, தரங்கம்பாடி, கொள்ளிடம் உள்ளிட்ட பகுதியில் கடல் சீற்றமாக இருந்தது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.