நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கர்ப்பிணி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

நாமக்கல்,
மோகனூர் அருகே உள்ள மாடகாசம்பட்டியை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் செல்வராஜ். இவரது மனைவி அமுதா (வயது 25). இவர் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார். பொன்னுசாமியும், அவரது அண்ணன் ராமசாமியும் நிலத்தகராறில் ஒருவரையொருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க கர்ப்பிணி அமுதா வந்தார். அந்த மனுவில் செல்வராஜ் மீது பொய்யான புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், எதிர் தரப்பினரை கைது செய்ய வலியுறுத்தியும், தனக்கும், தனது குழந்தைக்கும் பாதுகாப்பு அளிக்கவேண்டும் எனவும் தெரிவித்து இருந்தார். இந்த மனுவை மாவட்ட வருவாய் அலுவலர் பழனிச்சாமியிடம் வழங்கிய அவர், திடீரென தான் மறைத்து வைத்து இருந்த பாட்டிலில் இருந்து பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அவரை தடுத்து நிறுத்தினர்.இந்த சம்பவம் நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.