ஸ்ரீவைகுண்டம் ஜெயிலில் இருந்து தப்பியவர், கோர்ட்டில் சரண்

ஸ்ரீவைகுண்டம் ஜெயிலில் இருந்து தப்பியவர், கோர்ட்டில் சரண்

Update: 2017-11-06 22:45 GMT
ஸ்ரீவைகுண்டம்,

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 29). இவர் கடந்த 27-4-2017 அன்று திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் பக்தர்களிடம் தகராறு செய்து கொண்டிருந்தார். இதனை தட்டி கேட்ட மணிமுத்தாறு பட்டாலியன் போலீஸ்காரர் ஜெகதீசை மணிகண்டன் பாட்டிலால் தலையில் தாக்கினார்.இதுகுறித்த புகாரின்பேரில், திருச்செந்தூர் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து, ஸ்ரீவைகுண்டம் சப்- ஜெயிலில் அடைத்தனர்.இந்த நிலையில் கடந்த 20-7-2017 அன்று மணிகண்டன் ஸ்ரீவைகுண்டம் சப்- ஜெயிலில் காலை உணவு சாப்பிட்ட பின்னர் நைசாக காம்பவுண்டு சுவரின் மீது ஏறி, அருகில் உள்ள தாலுகா அலுவலக கட்டிடத்தின் வழியாக தப்பி சென்றார்.இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான மணிகண்டனை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் மணிகண்டன் நேற்று மதியம் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி முருகன் உத்தரவிட்டார். பின்னர் மணிகண்டனை போலீசார் ஸ்ரீவைகுண்டம் சப்- ஜெயிலில் மீண்டும் அடைத்தனர். 

மேலும் செய்திகள்