மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த உதவி சப்–இன்ஸ்பெக்டர் சாவு

புதுவையில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த உதவி சப்–இன்ஸ்பெக்டர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2017-11-06 22:45 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி முத்தியால்பேட்டை போலீஸ் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவர் காவல்துறை சிறப்பு பிரிவில் உதவி சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். நேற்று காலை கவர்னர் கிரண்பெடி மழை சேதங்களை பார்வையிட சென்றார். எனவே உதவி சப்–இன்ஸ்பெக்டர் சண்முகத்திற்கு முத்தியால்பேட்டை–கருவடிக்குப்பம் சந்திப்பு பகுதி பாதுகாப்பு பணி கொடுக்கப்பட்டு இருந்தது.

இதற்காக அவர் தனது மோட்டார் சைக்களில் அங்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது முத்தியால்பேட்டை சாலையில் செல்லும் போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன சண்முகத்திற்கு ஜோதி அம்மாள் என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

மேலும் செய்திகள்