முகநூல் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்ட புதுப்பெண் தற்கொலை

முகநூல் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்ட புதுப்பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2017-11-05 22:03 GMT

மைசூரு,

முகநூல் (பேஸ்புக்) மூலம் காதலித்து திருமணம் செய்துகொண்ட புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் இந்த  முடிவை அவர் எடுத்துள்ளார்.

ராய்ச்சூரை சேர்ந்தவர் வீரேஷ். இவர், மைசூருவில் தங்கி தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் தட்சிண கன்னடாவை சேர்ந்த அக்‌ஷதா (வயது 24) என்பவருக்கும் முகநூல் (பேஸ்புக்) மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில், வீரேசும், அக்‌ஷதாவும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு வீரேஷ், அக்‌ஷதாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அக்‌ஷதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் செய்திகள்