கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பலி காப்பாற்ற முயன்ற தாய் உயிருடன் மீட்பு
தா.பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பலியானான். நீச்சல் தெரியாத நிலையில் மகனை காப்பாற்ற கிணற்றில் குதித்து தத்தளித்த தாய் உயிருடன் மீட்கப்பட்டார்.
தா.பேட்டை,
திருச்சி மாவட்டம், தா.பேட்டையை அடுத்த கரிகாலி காட்டுகொட்டம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 35). இவரது மனைவி சுதா (27). இவர்களுக்கு இளங்கோ (8), சூர்யா (4) ஆகிய இரண்டு மகன்களும், சோபியா (6) என்ற ஒரு மகளும் உள்ளனர்.
இவர்களது வீட்டின் அருகே சுமார் 80 அடி ஆழமுள்ள தரைமட்ட பாசன கிணறு அமைந்துள்ளது. இந்த கிணற்றில் சுமார் 40 அடி வரை தண்ணீர் உள்ளது. இந்த கிணற்றில் இருந்து மின் மோட்டார் மூலம் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை 6 மணியளவில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச மின்மோட்டாரை போடுவதற்காக சுதா சென்றுள்ளார்.
அப்போது பின்தொடர்ந்து நடந்து வந்த சிறுவன் சூர்யா கிணற்றுக்குள் தவறி விழுந்தான். இதற்கிடையில் சுதா மோட்டாரை இயக்கியபோது கிணற்றில் இருந்து சத்தம் கேட்டது. இதனால் அவர் என்னவென்று கிணற்றுக்குள் எட்டி பார்த்தார். அப்போது கிணற்றுக்குள் சூர்யா தண்ணீரில் மூழ்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் என்னசெய்வதென்றே தெரியாமல் சத்தம்போட்டவாறே, மகனை காப்பாற்றும் நோக்கத்தில், நீச்சல் தெரியாத நிலையிலும் சுதா கிணற்றுக்குள் குதித்தார். இதற்கிடையில் சுதாவின் சத்தம் கேட்டு, அப்பகுதியில் இருந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் விரைந்து வந்து உயிருக்கு போராடிய இருவரையும் காப்பாற்ற முயன்றனர். இதில் சுதா தத்தளித்த படியே இருந்ததால் அவரை கிணற்றுக்குள் இறங்கி, கயிறுகட்டி மேலே தூக்கி காப்பாற்றினர். ஆனால், சிறுவன் சூர்யா கிணற்றுக்குள் மூழ்கியதால் அவனை காப்பாற்ற முடியவில்லை. அவன் கிணற்று தண்ணீரில் மூழ்கி இறந்தான்.
இது குறித்து தகவல் அறிந்த உப்பிலியபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கிணற்றில் மூழ்கி இறந்த சூர்யாவின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கிணற்றில் அதிக அளவில் தண்ணீர் இருந்ததால் இரண்டு மின்மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றி, பின்னர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி சூர்யாவின் உடலை மீட்டனர். பின்னர் அவனது உடலை துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து தா.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.