தட்டுப்பாட்டை போக்க வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்ய வேண்டும்

கட்டுமானத்துக்கு தேவையான மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால், அதை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும் என்று தமிழக கட்டிட தொழிலாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்ற சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2017-11-05 22:30 GMT
நெல்லை,

தமிழக கட்டிட தொழிலாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்ற சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நெல்லை வண்ணார்பேட்டையில் நேற்று நடந்தது. மாநில தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் பாலசுப்பிரமணியன், சின்னத்துரை, துணை தலைவர் சிதம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் பழனிச்சாமி, பொருளாளர் பேச்சியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

தீர்மானங்கள்

கூட்டத்தில், தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுமான பொருட்களான செங்கல், மணல், சிமெண்டு, கம்பி ஆகியவற்றின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். கட்டுமானத்துக்கு தேவையான மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இந்த தட்டுப்பாட்டை போக்க மணலை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும். கட்டிட தொழிலாளர்களுக்கு அரசு இலவசமாக தொகுப்பு வீடு கட்டித்தர வேண்டும். ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில துணை தலைவர் ரத்தினம், நிர்வாகிகள் சின்னத்துரை, கிட்டு, முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்