ஆம்பூரில் கட்சி நிர்வாகிகளுடன் டி.டி.வி. தினகரன் ஆலோசனை

ஆம்பூரில் கட்சி நிர்வாகிகளுடன் டி.டி.வி. தினகரன் ஆலோசனை

Update: 2017-11-05 22:30 GMT
ஆம்பூர்,

அ.தி.மு.க. (அம்மா) அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தர்மபுரிக்கு செல்லும் வழியில், வேலூர் மாவட்ட செயலாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வுமான ஆர்.பாலசுப்பிரமணி வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர், கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பாலசுப்பிரமணி, ஜெயந்திபத்மநாபன், ஆம்பூர் நகர செயலாளர் ய.செ.சமரசன், மாதனூர் ஒன்றிய செயலாளர் ஆர்.வெங்கடேசன், முன்னாள் நகரசபை தலைவர் சங்கீதாபாலசுப்பிரமணி மற்றும் கட்சி நிர்வாகிகள் டி.டி.வி. தினகரனை வரவேற்று சால்வை அணிவித்தனர்.

மேலும் செய்திகள்