தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி மூதாட்டி பலி ஆடு மேய்க்க சென்றபோது பரிதாபம்
தேன்கனிக்கோட்டை அருகே ஆடு மேய்க்க சென்றபோது யானை தாக்கி மூதாட்டி பலியானார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி அருகே கும்ளாபுரம் பக்கமுள்ள கங்கனப்பள்ளியைச் சேர்ந்தவர் நரசம்மா (வயது 70). கங்கனப்பள்ளி கிராமம் வனப்பகுதியையொட்டி உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை நரசம்மா அருகே உள்ள வனப்பகுதியில் ஆடுகளை மேய்க்கச்சென்றார்.
அப்போது கும்ளாபுரம் அருகே முகாமிட்டிருந்த யானை கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்த ஒரு யானை மூதாட்டி நரசம்மா அருகில் வந்தது. யானையை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட நரசம்மா முயன்றார். ஆனால், யானை துதிக்கையால் நரசம்மாவை தூக்கி தாக்கியது. மேலும், அவரை கீழே வீசிகாலால் மிதித்தது. இதில் அவர் அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதன் பிறகு யானை அங்கிருந்து சென்றுவிட்டது.
இந்த நிலையில் அந்த வழியாக சென்றவர்கள், நரசம்மா யானை தாக்கி பலியாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இது குறித்து ஜவளகிரி வனச்சரகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனச்சரகர் முருகேசன் மற்றும் வனத்துறையினர், தளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் அங்கு வந்தனர்.
நரசம்மாவின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வனத்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். யானை தாக்கி மூதாட்டி பலியான தகவல் அறிந்ததும் உதவி வன பாதுகாவலர் பஹதி டீஜே, மாவட்ட வன அலுவலர் தீபக் பில்ஜி மற்றும் வனச்சரகர்கள் ஆறுமுகம் (தேன்கனிக்கோட்டை), முருகேசன் (ஜவளகிரி), சீதாராமண் (ஓசூர்) ஆகியோர் கங்கனப்பள்ளிக்கு சென்று நரசம்மாவின் குடும்பத்திற்கு நிவாரண தொகையாக ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார்கள்.