காஞ்சீபுரம் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வுகாண ரூ.600 கோடியில் திட்டம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வுகாண ரூ.600 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியத்திற்கு மேல் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியது. திருநீர்மலை சித்தேரி நிரம்பி தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் உபரிநீர் தேங்கியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல தாம்பரத்தை சுற்றியுள்ள மாடம்பாக்கம், செம்பாக்கம், சேலையூர், இரும்புலியூர், பீர்க்கன்காரணை, ராஜகீழ்ப்பாக்கம் உள்ளிட்ட அனைத்து ஏரிகளும் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது.
மாடம்பாக்கம் பெரிய ஏரி நீண்ட நாட்களுக்கு பிறகு முழு அளவு நிரம்பி உபரிநீர் வெளியேறுவதால் அப்பகுதி மக்கள் ஏராளமானவர்கள் பார்த்து மகிழ்ந்தனர். பலர் செல்போனில் செல்பியும் எடுத்துக்கொண்டனர். தாம்பரம் முடிச்சூர் சாலையில் வெள்ளம் தேங்கியுள்ளது. சாலையில் பல இடங்களில் பெரும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டனர்.
பெருங்களத்தூர் பேரூராட்சி குட்வில் நகரிலும் மழை வெள்ளம் தொடர்ந்து தேங்கியுள்ளது. ராஜகீழ்ப்பாக்கம் ஏரியில் முழு அளவு தண்ணீர் உள்ளதால் ஏரி ஆக்கிரமிப்பு வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. ஆக்கிரமிப்பாளர்கள் சிலர் ராஜகீழ்ப்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.
இந்த நீர் முழுவதும் தாம்பரம்-வேளச்சேரி பிரதானசாலை வழியாக வந்து அங்குள்ள கழிவுநீர் கால்வாயில் கலந்து குடியிருப்பு பகுதியான வள்ளல் யூசுப் நகர், சாமியார்மடம் தெரு, பாரதிதாசன் தெரு, மாருதி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகளில் புகுந்தது. இதனால் அப்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அவதிக்குள்ளாகின. செம்பாக்கம் பெரிய ஏரி உபரிநீர் வெளியேறி வருவதால் திருமலை நகர் பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
சென்னை புறநகர் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை அமைச்சர் கே.பி.அன்பழகன், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அமுதா, மாவட்ட கலெக்டர் பொன்னையா மற்றும் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்து நிவாரண பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார். தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் அமைச்சர் கே.பி.அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வுகாண ரூ.600 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதேபோல ரூ.263 கோடியில் உபரிநீரை கடலில் கொண்டுவிட மற்றொரு திட்டமும் அரசின் பரிசீலனையில் உள்ளது. அந்த திட்டம் நிறைவேற்றப்படும்போது இந்த பகுதியில் வெள்ள பாதிப்பு நிச்சயம் ஏற்படாது. தற்போது மழை வெள்ளத்தை கடலில் கொண்டு சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மதுராந்தகம் ஏரியின் முழு கொள்ளளவு 23.30 அடி. இதில் தற்போது 21 அடி தண்ணீர் நிரம்பியுள்ளதால் உபரிநீர் திறக்கப்பட்டு கிளியாற்றில் விடப்படுகிறது. இதனால் கிளியாற்று கரையில் உள்ள 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஆதனூர் மற்றும் பழைய பெருங்களத்தூர் அரசு பள்ளி ஆகிய 2 இடங்களில் நிவாரண முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இப்போது 300 பேர் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.