அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் பரவலான மழை

அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் பரவலான மழை

Update: 2017-11-04 22:15 GMT
அரியலூர்,

அரியலூரில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் இரவிலிருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படவில்லை. வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் மக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டது. விவசாய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த மழை இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று காலை 8 மணி நிலவரப்படி அரியலூர் மாவட்டத்தில் பெய்த மழையளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- அரியலூர்-20, ஜெயங்கொண்டம்-50.5. இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இருசக்கர வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் போக்குவரத்தை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. எனினும் நிலத்தடி நீர்மட்டம் உயருவதற்கு இந்த மழை உதவியாக இருக்கும் என்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி மழையின் விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- செட்டிகுளம் -13, பெரம்பலூர்- 12, வேப்பந்தட்டை -7, தழுதாழை- 4, பாடாலூர்- 5, மொத்தம்- 41, சராசரி-8.20. 

மேலும் செய்திகள்