கூடுதல் வரிவிதிப்பு: நகராட்சி ஆணையாளரிடம் தொழில் வர்த்தக சங்கத்தினர் மனு
ராஜபாளையம் நகராட்சி ஆணையாளர் சசிகலாவை தொழில் வர்த்தகம் சங்கம் சார்பில் துணை தலைவர் பத்மநாபன், செயலாளர்கள் வெங்கடேஸ்வரராஜா, நாராயணசாமி மற்றும் நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் நகராட்சி ஆணையாளர் சசிகலாவை தொழில் வர்த்தகம் சங்கம் சார்பில் துணை தலைவர் பத்மநாபன், செயலாளர்கள் வெங்கடேஸ்வரராஜா, நாராயணசாமி மற்றும் நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் நகர் பகுதிகளில் வீடு,, கடைகளுக்கு கூடுதலான வரிவிதித்திருப்பதால் அனைவரும் மிகவும் அவதிப்படுகின்றனர். இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கூறியிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆணையாளர், 2008–ம் ஆண்டுக்கு பின்னர் வரிகட்டாமல் இருப்பவர்களுக்கும், கூடுதலாக இடத்தை வைத்துக் கொண்டு பாதி இடத்திற்கு மட்டும் வரி செலுத்துபவர்களையும் கண்டுபிடித்து அவர்களிடம் இதுவரை கட்டாதவரி சேர்த்து வசூலிக்கப்படுகிறது. கூடுதலாக வரிவிதிக்கப்படவில்லை என கூறினார். மேலும், பல்வேறு பிரச்சினை குறித்தும் ஆலோசனை மேற்கொண்டனர்.