பயிர் இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் மீது வழக்குப்பதிவு

விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் கடந்த 2016–17–ம் ஆண்டுக்கான பயிர் இழப்பீட்டு தொகையை முழுமையாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-11-04 22:15 GMT

தொண்டி,

திருவாடானை தாலுகா மங்கலக்குடியில் தாலுகா விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் கடந்த 2016–17–ம் ஆண்டுக்கான பயிர் இழப்பீட்டு தொகையை முழுமையாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் விவசாயிகள் தேவகோட்டை– வட்டாணம் சாலையில் அமர்ந்து சாலை மறியல் ஈடுபட்டனர்.

 இதுகுறித்து மங்கலக்குடி கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி திருவாடானை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்பேரில் திருவாடானை போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேசுவரி இதுதொடர்பாக திருவாடானை விவசாயிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கடம்பூர் துரைவிசுவநாதன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பதனக்குடி ரவி, ஆர்.எஸ்.மங்கலம் முன்னாள் யூனியன் தலைவர் நல்லசேதுபதி, முன்னாள் ஊராட்சி தலைவர்கள் வெளியங்குடி முருகானந்தம், எட்டுகுடி மரிய அருள், ஆண்டாவூருணி ஜேம்ஸ், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் நசீர், மாவட்ட விவசாய சங்க தலைவர் சோழந்தூர் பாலகிருஷ்ணன், கட்டவிளாகம் சித்தநாதன், விவசாயிகள் கூட்டமைப்பு செயலாளர் நெய்வயல் முரளி, பொருளாளர் கூகுடி பார்த்தசாரதி, மங்கலக்குடி உமர்பாருக் மற்றும் விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.

மேலும் செய்திகள்