சட்டம் இயற்றுவதற்கு முன்பே போராட்டம் நடத்துவது சரியல்ல சித்தராமையா பேட்டி

சட்டம் இயற்றுவதற்கு முன்பே தனியார் மருத்துவமனைகள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவது சரியல்ல என்று சித்தராமையா கூறினார்.

Update: 2017-11-03 22:45 GMT

பெங்களூரு,

முதல்–மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–

கர்நாடக தனியார் மருத்துவமனைகள் நிறுவுதல் சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து தனியார் மருத்துவமனை டாக்டர்களுடன் பல முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இப்போது அவர்கள் திடீரென வேலை நிறுத்த போராட்டம் நடத்துகிறார்கள். நோயாளிகளுக்கு எந்த தொந்தரவும் ஏற்படாத வகையில் அரசு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அனைத்து அரசு டாக்டர்களும் இன்று (அதாவது நேற்று) பணிக்கு ஆஜராக வேண்டும், தேவையான அளவுக்கு மருந்து, மாத்திரைகளை தயார் நிலையில் வைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். திருத்த மசோதா மீது சட்டசபையில் விவாதம் நடைபெறும். அதன் பிறகே அந்த மசோதா நிறைவேற்றப்படும். சட்டம் இயற்றுவதற்கு முன்பே தனியார் மருத்துவமனை டாக்டர்கள் போராட்டம் நடத்துவது சரியல்ல.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

மேலும் செய்திகள்