பா.ஜ.க.வினரை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தராஜன் அவதூறாக பேசியதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2017-11-03 22:30 GMT

புதுச்சேரி,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தராஜன் அவதூறாக பேசியதை கண்டித்தும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுச்சேரியிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று பாரதீய ஜனதா கட்சியினரை கண்டித்து தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விடுதலை சிறுத்தைகளின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் தலைமை தாங்கினார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை மாநில செயலாளர் விசுவநாதன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் அமுதவன், தமிழ்மாறன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதையொட்டி புதுவை கவர்னர் மாளிகை முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்