திருவள்ளூரில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2017-11-03 22:00 GMT

திருவள்ளூர்,

டாஸ்மாக் ஊழியர்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் அறிவழகன் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயவேல், பிரசார செயலாளர் தயாளன், அமைப்பு செயலாளர் ஆனந்தபாபு, ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரசாக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் சென்னை மாவட்ட தலைவர் ராஜன், மாநில பிரசார செயலாளர் கோதண்டன் ஆகியோர் பேசினர். இதில் திரளான டாஸ்மாக் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

முடிவில் பொருளாளர் மோகனரங்கன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்