விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது பாரதீய ஜனதா கட்சியினர் தாக்குதல் நடத்தியதை கண்டித்து தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2017-11-03 22:15 GMT

நெல்லை,

கரூர், மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது பாரதீய ஜனதா கட்சியினர் தாக்குதல் நடத்தியதை கண்டித்து தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

 நெல்லை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தின் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழினியன், மகளிர் அணி மாநில துணை செயலாளர் அமுதா மதியழகன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர்கள் கரிசல் சுரேஷ், சுந்தர், டேனியல் அருள்சிங், சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. மாவட்ட செயலாளர் அப்துல்வகாப், லட்சுமணன் எம்.எல்.ஏ., மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷங்கள் போட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் முகமதுஅலி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் பாஸ்கரன், எஸ்.டி.பி.ஐ. மாநில துணை தலைவர் நெல்லை முபாரக், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்