கோவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று மாலை நடைபெற்றது.

Update: 2017-11-03 21:45 GMT

கோவை,

கரூர், மயிலாடுதுறையில் வன்முறையில் ஈடுபட்ட பா.ஜனதா கட்சியினரின் போக்கை கண்டித்து கோவை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று மாலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் இலக்கியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் சித்தார்த், நிலா மணிமாறன், பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகமது அலி, பாலசிங்கம் ஆகியோர் வரவேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில், இருகூர் சுப்பிரமணியம், போஸ்(காங்.), சேதுபதி, வக்கீல் சூரிநந்தகோபால்(ம.தி.மு.க.), வேலுசாமி(மார்க்சிஸ்டு கம்யூ.), கு.ராமகிருட்டிணன்(தந்தைபெரியார் திராவிடர் கழகம்), அபுதாகிர்(எஸ்.டி.பி.ஐ.) உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பா.ஜனதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

மேலும் செய்திகள்