விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

குமரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நாகர்கோவில் மீனாட்சிபுரம் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2017-11-03 22:15 GMT

நாகர்கோவில்,

குமரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நாகர்கோவில் மீனாட்சிபுரம் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தொல்.திருமாவளவனை பற்றி அவதூறாக பேசிய பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி குமரி மாவட்ட நெறியாளர் செல்லப்பாண்டியன் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் திருமாவேந்தன் முன்னிலை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயின், தொகுதி செயலாளர் பகலவன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தின் போது தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக கண்டன கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் செய்திகள்